தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை... அமைச்சர் அன்பில் மகேஷ்...

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 20, 2022, 12:33 PM IST

கன்னியாகுமரி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (ஆகஸ்ட் 19) கன்னியாகுமரியில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் பேசுகையில், போதை விழிப்புணர்வு குறித்து கடந்த 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை. இந்த விழிப்புணர்வை மாணவர்களிடையே கொண்டு செல்லும் பணியை திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டிருக்கிறது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு அருகே உள்ள மதுக்கடைகள் அகற்றும் பணி துறை ரீதியாக தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் முதற்கட்டமாக மதுக்கடைகளை அகற்றும் ப தொடங்கிவிட்டது. அதோடு வழிப்பாட்டு தலங்கள், மருத்துவமனைகளுக்கு அருகே மக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள அனைத்து மது கடைகளையும் கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பது எங்கள் முடிவு.

தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு டேப் கொடுப்பதாக கூறப்பட்டது. ஆனால் மணவர்கள் கவனக்குறைவாக பயன்படுத்தினால் டேப் சேதாரமாகும் என்பதால் மீண்டும் மடிக்கணினியே கொடுக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆட்சியில் ஒன்றரை லட்சம் லேப்டாப் கொடுக்கப்படவில்லை. அதனையும் சேர்த்து கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ராஜீவ் காந்தி 78ஆவது பிறந்தநாள்... தலைவர்கள் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details