குமரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்துவரும் அதே வேளையில், இதற்கு ஆதரவாக பாஜகவினர் போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்து கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் குமரி மாவட்டம் நாகர்கோவிலில், அதன் சுற்று வட்டாரத்திலுள்ள வெள்ளாடிச்சிவிளை, வட்டவிளை, மேலசரக்கல்விளை உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள இந்து கோயில் வளாகங்களில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. பெரியோர் முதல் சிறுவர்கள் வரை சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.