கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பேருந்து நிலையம் சந்திப்பு பகுதியில் அண்ணா சிலை உள்ளது. இந்த சிலையின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் காவித் துணியை போர்த்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று (ஜூலை 29) இரவில் அரங்கேறியுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று (ஜூலை 30) காலை அவ்வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்து, குழித்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அண்ணா சிலை மீது போர்த்தப்பட்டிருந்த காவித் துணியை அகற்றினர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக தலைவர்களின் சிலை அவமரியாதை செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவையிலுள்ள பெரியார் சிலையின் மீது காவி சாயம் பூசப்பட்டது. இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குழித்துறை பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை மீது காவித் துணி போரத்தியதால் பரபரப்பு இதைத்தொடர்ந்து தற்போது கன்னியாகுமரியில் பேரறிஞர் அண்ணாவின் சிலை மீது காவித் துணி போர்த்தப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காரணமில்லாமல் கைது செய்யக் கூடாது: டிஜிபி திரிபாதி!