தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 11, 2019, 9:44 PM IST

ETV Bharat / state

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை தொடக்கம்!

கன்னியாகுமரி: டவுன் பஞ்சாயத்துகளில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை கன்னியாகுமரியில் தொடங்கியது.

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை துவங்கியது.

வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டக் கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டது.

இந்த பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்பும் பணி கன்னியாகுமரி திடக்கழிவு மேலாண்மை சேகரிப்பு மையத்தில் தொடங்கியது.

குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகர்கோவில் வல்லன் குமாரவிளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்து, அவற்றை பேக்கிங் செய்து அலங்கார தரை ஓடு தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மை சேகரிப்பு மையத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை தொடக்கம்

இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், சுகாதார அதிகாரி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் நவீன இயந்திரங்கள் பொருத்தும் பணி தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details