தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்நாடகாவில் இருந்து குமரிக்கு வந்த 3 ஆயிரம் டன் ரேசன் அரிசி!

கன்னியாகுமரி: மே மாதம் வழங்குவதற்கான ரேசன் அரிசி கர்நாடகாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 3 ஆயிரம் டன் அரிசி கன்னியாகுமரி வந்தடைந்தது.

By

Published : May 6, 2020, 7:47 PM IST

ration rice
ration rice

தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் அரிசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதில் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது, மே மாதத்திற்கான பொருள்கள் ரேசன் கடையில் வழங்கப்பட்டுவருகிறது.

அதே போன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 770 ரேஷன் கடைகளிலும், ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தினமும் 150 பேருக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேசன் கடைக்குப் பொருள்கள் வாங்கவரும் மக்கள் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து ரேசன் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

நாகர்கோவில் வந்த 3 ஆயிரம் டன் ரேசன் அரிசி!

ரேசன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில், வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலமாக ரேஷன் அரிசி கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே சரக்கு ரயில்களில் சுமார் 2,500 டன் அரிசி குமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட, நிலையில் இன்று கர்நாடகாவில் இருந்து குமரிக்கு சரக்கு ரயில் ஒன்று வந்தது. அதில் சுமார் 3 ஆயிரம் டன் ரேசன் அரிசி வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து ரயிலில் இருந்து இறக்கப்படும் ரேசன் அரிசி, லாரிகள் மூலமாக நாகர்கோவிலில் உள்ள குடோனுக்குக் கொண்டு செல்லப்படும். பின்பு குடோன்களில் இருந்து ரேசன் கடைகளுக்குத் தங்கு தடையின்றி அனுப்பி வைப்பதற்கு, அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனாவால் மற்ற தொற்றுகள் அதிகரிக்கும் - யுனிசெஃப் கவலை

ABOUT THE AUTHOR

...view details