கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அண்ணல் காந்தியடிகளுக்கு நினைவு மண்டபம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காந்தி பிறந்த நாள் அன்று நண்பகல் 12 மணிக்கு காந்தி மண்டபத்தின் மேல் உள்ள துவாரம் வழியாக மண்டபத்தினுள் காந்தி அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் உள்ள அஸ்தி கட்டடத்தில் சூரிய ஒளி விழுவது வழக்கம்.
காந்தி பிறந்த நாள் அன்று மட்டுமே விழும் இந்த சூரிய ஒளியினைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது உண்டு. அதே போன்று இன்று மகாத்மாவின் பிறந்த நாளினையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் காந்தி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் காந்தி அதிகம் தன் வாழ்நாளில் பாடிய 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்னும் பக்திப்பாடலைப் பாடி, அண்ணல் காந்தியடிகளை பலர் நினைவுகூர்ந்தனர்.