தமிழர் திருநாளாம் தை பொங்கல் மாநிலம் முழுவதும் இன்று (ஜனவரி 14) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள பிரசித்திப் பெற்ற கோயிலில் பொதுமக்கள் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
பொங்கல் விழாவில் பங்கேற்க திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
கன்னியாகுமரி: குலசேகரம் அருகே கோயிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மனோ தங்கராஜுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
இந்த விழாவில் பங்கேற்பதற்காக வந்த பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜை, கோயிலுக்குள் நுழைய விடாமல் ஊர் பொது மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இருந்தபோதும், எம்எல்ஏவை கடைசி வரை கோயிலுக்குள் அனுமதிக்காததால், அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.