தமிழ்நாடு

tamil nadu

தனியார் பள்ளி அங்கீகாரம் புதுப்பிப்பதற்கான ஆவணங்கள் திடீர் மாயம் - ஆசிரியர்கள் வேதனை

By

Published : Aug 18, 2022, 11:55 AM IST

தனியார் பள்ளியின் 2021 - 2024 ஆண்டிற்கான அங்கீகாரம் புதுப்பிக்க குழித்துறை கல்வி மாவட்ட அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட 40 ஆவணங்கள் மாயமாகியுள்ளது.

Etv Bharatதனியார் பள்ளி அங்கீகாரம் புதுப்பிப்பதற்கான  ஆவணங்கள் திடீர் மாயம் - ஆசிரியர்கள் வேதனை
Etv Bharatதனியார் பள்ளி அங்கீகாரம் புதுப்பிப்பதற்கான ஆவணங்கள் திடீர் மாயம் - ஆசிரியர்கள் வேதனை

கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குழித்துறை மறை மாவட்டத்தை சார்ந்த அரசு நிதி உதவி பெரும் கிறிஸ்துவ அரசர் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 250 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 17 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் சுமார் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த பள்ளிக்கு 2021 - 2024 ஆண்டிற்கான அரசு அங்கீகாரம் புதுப்பித்து வழங்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகம் சார்பில் குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்ப மனு அளிக்கப்பட்டது.

கல்வி அதிகாரிகள் விண்ணப்ப மனுவை முறையாக சர்பார்த்து பெற்றனர். தற்போது அதில் 40 ஆவணங்கள் மயமாகி உள்ளது. 2019 ல் ஆசிரியர் ஒருவருக்கு பண பலன்களை வழங்க விண்ணப்பித்த போது அவர்கள் கேட்ட லஞ்சம் கொடுக்காததால் இது கல்வி அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கை என கூறி சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகம் நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தனியார் பள்ளி அங்கீகாரம் புதுப்பிப்பதற்கான ஆவணங்கள் திடீர் மாயம் - ஆசிரியர்கள் வேதனை

மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்க வில்லை என புகார் கொடுக்க வந்த ஆசரியர்கள் கூறினார்கள். தவறு செய்தவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கனமழையில் முறிந்து விழுந்த 100கும் மேற்பட்ட மரங்கள்....

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details