தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு தளர்வு : நாளை முதல் கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதி

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக அடைக்கப்பட்டிருந்த கோயில்கள் நாளை முதல் தரிசனத்திற்காக திறக்கப்படுகின்றன. இதனால், கோயில்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று நடைபெற்றது.

கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதி
கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதி

By

Published : Jul 4, 2021, 10:14 PM IST

கன்னியாகுமரி :நாளை முதல் கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் உள்ள 731 கோயில்களில் கிரிமிநாசினி தெளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிபடியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதே வேளையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழிபாட்டுத்தலங்களில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 55 நாட்களுக்கு பின்னர் தமிழ்நாட்டில் நாளை (ஜூலை 5) கோயில்கள் திறக்கப்படுகின்றன.

இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 731 கோயில்களில் இன்று (ஜூலை 4) உள்ளாட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் குறைந்த கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details