கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளை சமீபத்தில் முண்டந்துறை புலிகள் சரணாலயத்துடன் தமிழ்நாடு வனத்துறை இணைத்தது. இதனால், குமரி மாவட்ட வனப்பகுதிகளில் வசிக்கும் மலை வாழ் மக்கள், வனத்துறையினரால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதபோல், குமரி மாவட்ட மக்கள் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் அமைந்துள்ள இடங்களை சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலமாக வனத்துறை அறிவித்துள்ளது. மேலும், தடிகாரன்கோணம் வளையத்து வயல் உட்பட கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களை வேலி அமைத்து அடைக்கவும் வனத்துறை முயன்று வருகிறது.
வனத்துறையினரைக் கண்டித்து மழைவாழ் மக்கள் ஆர்பாட்டம் இந்நிலையில், மழை வாழ் மக்களுக்கு எதிராக பல திட்டங்களை செயல்படுத்துவதைக் கண்டித்தும் இது போன்ற திட்டங்களை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கீரீப்பாறை வாளையத்து வயல், புது நகர் பால்குளம் உள்ளிட்ட 17 மலை கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தடிகாரன்கோணம் சந்திப்பில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மலை வாழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் வனத்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க : கன்னியாகுமரி போலீஸின் செயலால் வைரலாகும் வீடியோ..