தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழுநோய் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கன்னியாகுமரி: மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் நாகர்கோவிலில் தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

leprosy awareness rally nagarkovil, தொழுநோய் ஒழிப்பு குறித்து நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் பேரணி
leprosy awareness rally nagarkovil

By

Published : Feb 5, 2020, 9:02 AM IST

தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி குமரி மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் நாகர்கோவிலில் தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. நாகர்கோவில் டதி மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவ, மாணவியர் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளைத் தங்கள் கைகளில் ஏந்தியவாறு வீதியில் சென்றனர். இதனிடையே, தொழுநோய் குறித்து விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

தொழுநோய் ஒழிப்பு குறித்து நாகர்கோவிலில் நடந்த விழிப்புணர்வு பேரணி

வேப்பமூடு சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு ஆகிய சந்திப்புகள் வழியாகச் சென்ற இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மீண்டும் டதி பள்ளிக்குச் சென்று நிறைவடைந்தது.

இதையும் படிங்க : முடிவில்லா சோழர்கள்; முசிறியில் தடயங்கள்...

ABOUT THE AUTHOR

...view details