கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகாமையில் உள்ள கேரளா மாநிலத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன் காரணமாக கன்னியாகுமரி மக்கள் மத்தியில் கரோனா வைரஸ் குறித்து பீதி நிலவி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரை காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் கரோனாவிடம் ஒப்படைத்துவிடவும் என்று அவரது புகைப்படத்துடன் கூடிய தகவல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.
அந்த வைரல் புகைப்படத்தில், "காணவில்லை... பெயர்: வசந்தகுமார், வயது: அதெல்லாம் எதுக்கு?, சிறப்பு: ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தெருவிலும், தினம் தினம் தொலைக்காட்சியிலும் வணக்கம் வைப்பது.
கடந்த மக்களவை தேர்தலுக்குப் பின் காணாமல் போனதாக தகவல். யாரும் பார்த்தால் கரோனாவிடம் ஒப்படைக்கவும்"என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வாட்ஸ் அப் குழுக்களில் வேகமாகப் பரவியது.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் பேசும் காணொலிக் காட்சி ஒன்று தற்போது வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது. அதில், அவர் கூறியிருப்பதாவது, "கன்னியாகுமரி மாவட்ட சகோதர சகோதரிகளே நாட்டில் கரோனா வைரஸ் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனா வைரஸ் மிகவும் கொடுமையானது.
எம்.பி வசந்தகுமார் வாட்ஸ் அப் கணொளி இதனால், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். தாய், தந்தை, மனைவி, மக்கள் அனைவரையும் பத்திரமாக பாதுகாத்து இந்த கரோனா வைரஸை நாம் வெல்ல வேண்டும். குழந்தைகள் விளையாட்டாக வெளியேச் செல்வதைகூட நீங்கள் தடுத்து நிறுத்தி அவர்களை பாதுகாக்க வேண்டும்.
எல்லாம் நமக்கு நல்லபடியாக நடக்கும் என்று இறைவனை வேண்டி நாம் அமைதியாக பொறுமைகாத்து வீட்டில் இருக்க வேண்டும் என்று அன்போடு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:சொந்த செலவில் அரசு அலுவலக பணிகளுக்கு கணிப்பொறி வழங்கிய வசந்தகுமார் எம்.பி.