மத்திய அரசின் பிட் இந்தியா அமைப்பு சார்பில் மாவட்டந்தோறும் இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணி காத்திடும் வகையில் தடகள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு இளைஞர்களின் ஆரோக்கியம், மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இதனை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் கொடியசைத்து தொடங்கிவைத்தார். சுமார் 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டமானது பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, ஸ்டேட் வங்கி சாலை வழியாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மீண்டும் விளையாட்டரங்கில் முடிவடைந்தது.
இதையும் படிங்க: திருவள்ளுவர் பெயரில் சொகுசு படகு! சோதனை ஓட்டம் வெற்றி!