தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது கிணற்றில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி: இரும்பு கம்பி மூடி போடப்பட்ட பொது கிணற்றில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோட்டாறு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

suicide
suicide

By

Published : Jun 26, 2021, 4:13 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டாறு பட்டரய்யர்நெடு தெருவை சேர்ந்தவர் அசோக் குமார் (50). இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த அசோக் குமார் கடந்த நான்கு ஆண்டுகளாக உள்ளூரிலேயே கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அசோக்குமார் குடி பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். இதனால் வீட்டு தேவைக்காகவும், குடிப்பதற்கும் அசோக்குமார் பலரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு கடன் கொடுத்தவர்களில் சிலர் நேற்று (ஜூன். 25) அசோக் குமாரின் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பிக்கேட்டுள்ளனர்.

இதில் மனமுடைந்த அசோக்குமார் இன்று (ஜூன்.26) காலை அப்பகுதியில், இரும்பு கம்பி மூடி போடப்பட்ட பொது கிணற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து நிலையில் காணப்பட்டார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல

தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த காவல் துறையினர், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் காவல் துறையினர் அசோக்குமாரின் சடலத்தை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details