குமரி மாவட்டம் மயிலாடி அடுத்த குலசேகரன் புதூர் பகுதியை சேர்ந்தவர் வேழவேந்தன் (54). இவர் மயிலாடி பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் நடத்திவருகிறார். இவர் அடிக்கடி தொழில் விஷயமாக வெளியூர் சென்று வருவது வழக்கம். ஒரு வாரம் இரண்டு வாரங்கள் வெளியூரில் தங்கி இருந்துவிட்டு பின்னர் மீண்டும் வருவார்.
இந்நிலையில் அவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் பங்க் நடத்த முடியாமல் திணறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள பாரத் பெட்ரோலியம் பொது மேலாளரை சந்தித்து பேசி வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.