தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

64ஆவது கன்னியாகுமரி தினம் கொண்டாட்டம்!

கன்னியாகுமரி: தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைக்கப்பட்டதை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

marshal nesamani

By

Published : Nov 1, 2019, 2:41 PM IST

கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த கன்னியாகுமரி மாவட்டம் 1956 நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டுடன் இணைந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இருந்தபோது தமிழர்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் நிகழ்ந்துள்ளன.

இதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்தது. இந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்த மார்ஷல் நேசமணியின் மணிமண்டபம் நாகர்கோவிலில் உள்ளது.

இந்நிலையில், மார்ஷல் நேசமணி சிலைக்கு குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, சட்டப்பேரவை உறுப்பினர்களான சுரேஷ் ராஜன், ஆஸ்டின், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், அதிமுகவினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details