தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் வழங்கிய உணவையே இரவும் தருகிறார்கள் - கரோனா நோயாளிகள் போராட்டம்

கன்னியாகுமரி: நாகர்கோவில் அண்ணா பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட கரோனா நோயாளிகள் தங்களுக்கு முறையான உணவு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

kanniyakumari
kanniyakumari

By

Published : Jul 18, 2020, 5:10 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு போதிய இடம் இல்லாததால் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள தனியார் பள்ளி, எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, கோணம் அண்ணா பொறியியல் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோணம் அண்ணா பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படாததைக் கண்டித்து கரோனா பாதிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு நேரம் வழங்கப்படும் உணவையே மீண்டும் அடுத்த நேரத்திற்கு வழங்குவதாக புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வெளியான வாட்ஸ் அப் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இங்கு 100க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள், சிறு குழந்தைகள், பெண்கள் என அனைவரும் இருக்கிறோம். ஆனால், சாப்பாடு ஓழுங்காக வருவதில்லை. இதுகுறித்து அலுவலர்களிடம் பலமுறை தகவல் அளித்த பின்னரும் கண்டுகொள்வதில்லை.

இங்கு மதியம் வழங்கப்படும் உணவையே, இரவும் உணவாக தருகின்றனர். இதனால், சிறு குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அலுவலர்களிடம் இதுகுறித்தும் கேட்டால் சரியான பதில் கிடைப்பதில்லை. வேறு வழியின்றி போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கரோனா பாதிப்பாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கரோனா பாதிப்பாளர்கள் வேதனை

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகும் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:'ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு; கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு ட்வீட்' - நீதிமன்றத்திற்குச் செல்லும் திமுக

ABOUT THE AUTHOR

...view details