கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா 10 நாள்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
இந்தாண்டு நடைபெற்ற திருவிழாவின் கடைசி நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை அம்மனுக்கு தயாரிக்கப்பட்ட பதினோறு வகையான உணவு பதார்த்தங்கள் கோயில் பூசாரிகளால் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு படைக்கப்பட்டன. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றதையடுத்து விழாக்கொடி இறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க;'கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக மாறிய தமிழ்நாடு'