தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை மீனவ கிராமத்தில் அருகே துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த கிராமத்தில் கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதிகளில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என அங்குள்ள மீனவ மக்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஆலந்தலை கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள கடற்கரைப் பகுதியை பார்வையிட்ட கனிமொழி, கடல் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை: கனிமொழி உறுதி! அதேபோல் வீரபாண்டியன் பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு முறையாக அமைக்காததால் வீரபண்டியன்பட்டினம் கிராமத்திலும் கடலரிப்பு ஏற்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு நேரில் சென்று கனிமொழி, இதை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மீனவர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.