நாகர்கோவில் மாநகராட்சிட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த பல்வேறு கட்டடங்கள், மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில், நகரமைப்பு அலுவலர் விமலா, நகரமைப்பு ஆய்வாளர் கெபின்ஜாய் ஆகியோர் மேற்பார்வையில் மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சி கார்டன் பகுதியில் ஆக்கிரமிப்பிலிருந்த வீடுகள் நேற்று அகற்றப்பட்டது. இன்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறுவதால், அதே பகுதியில் ஜேசிபி வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு வந்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஜேசிபி; அடித்து நொறுக்கிய அடையாளம் தெரியாத கும்பல்!
குமரி: மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து உடைத்துள்ளனர்.
ஜேசிபி வாகனத்தை மர்ம நபர்கள் அடித்து உடைப்பு
இந்நிலையில், அவ்வாகன ஓட்டுநர்கள் திரும்பிவந்து பார்த்தபோது, ஜேசிபி வாகனம் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ஜெகன் உடனடியாக கோட்டார் காவல் நிலையத்திற்குப் புகார் கொடுத்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 17 வயது கொல்லம் பெண்ணுக்கு அத்தையால் நேர்ந்த கதி?
Last Updated : Dec 9, 2019, 12:07 AM IST