கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே அமைந்துள்ளது லட்சுமிபுரம் கிராமம். இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தினுள் எந்தவிதமான கட்சி கொடிகள் கட்டுவதற்கும், கட்சி கொடி கம்பங்கள் நிறுவதற்கும், கடந்த பத்து ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தடை விதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கிராமத்திற்குள் அரசியல் பேசக் கூடாது என்றும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.
கட்சியும், சாதியும் வேண்டாம் - மனித நேயத்தை காக்கும் கிராம மக்கள் !
கன்னியாகுமரி : கட்சி கொடிகளை அறவோடு வெறுக்கும் கிராம மக்கள் சாதி, மத பேதமின்றி 73வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மதசார்மின்மையை போற்றும் இந்த கிராமக்கள் ஊரின் நடுவே தேசியகொடி கம்பம் நிறுவி 73ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். இதில், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர்.
இதில் இயற்கை விஞ்ஞானி லால்மோகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கொடி கம்பம் முன்பு கிராம மக்கள் அனைவரும் நின்று சாதி, மத வேறுபாடுகளின்றி ஒற்றுமையாக இருப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.கட்சி கொடிகளே இல்லாத வித்தியாசமான இந்தக் கிராம மக்களை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.