தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட குடும்பம்!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மருத்துவக் கல்லூரி மாணவி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை

By

Published : May 18, 2019, 6:55 PM IST


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(52). இவருக்கு மனைவி ஹேமா(48), மகள் சிவானி(20), தாய் ருக்மணி (72) ஆகியோர் உள்ளனர். இவர் நாகர்கோவிலில் சிகரெட், பிஸ்கட் போன்ற பொருட்களை கடைக்கு விற்பனை செய்யும் ஏஜென்சியை நடத்தி வருகிறார். சிவானி குலசேகரம் பகுதியில் தனியார் கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை சுப்பிரமணியின் வீட்டில் கடைக்கான சாவி வாங்க ஊழியர் ஒருவர் வந்தார். அப்போது, கதவு திறக்கப்படாமல் இருந்தது. உறவினர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் நான்கு பேரும் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை
இதுகுறித்து, காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து வடசேரி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொழில் நஷ்டம், கடன் தொல்லை ஆகியவை காரணமாக நான்கு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details