கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, ஆழ்கடலில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு ஏப்ரல், மே மாதங்களில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இதற்கடுத்தும், மீன் பிடி தடைக்காலம் தொடருமானால், மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.
மீன் பிடி தடை காலத்தை ரத்து செய்யக் கோரிக்கை!
கன்னியாகுமரி: கரோனா நெருக்கடியால், வருவாயிழந்த மீனவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, மீன் பிடி தடை காலத்தை தளர்த்த வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “மீன்பிடி தடை காலம் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் இருக்கும். குமரி மாவட்டத்தில் ஏற்கனவே, 50 நாள்களுக்கும் மேலாக மீனவர்கள், தொழிலுக்கு செல்லாமலிருக்கிறோம். இதனால் மீனவர்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, வரும் மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும். ஆழ்கடல் மீனவர்களின் மீது கருணை கொண்டு, மே மாதத்தில், மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:'அரசு தளர்வு அளித்தால் போதும்... நாங்கள் பாதுகாப்பாக சிகை திருத்துவோம்'