தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கப்பல் மோதி உயிரிழப்பு!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சார்ந்த பிலேந்திரன் என்ற மீனவர், வளைகுடா நாடான கத்தார் பகுதியில் இருந்து விசைப்படகில், மீன் பிடிக்கச் சென்ற போது கப்பல் மோதியதில் உயிரிழந்தார்.

fisherman-death-boat-accident

By

Published : Oct 20, 2019, 3:18 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையினைச் சார்ந்தவர் பிலேந்திரன் வயது (46). இவருக்குத் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழில் செய்ய வளைகுடா நாடான கத்தாருக்குச் சென்று உள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்காம் தேதி வழக்கம் போல சக மீனவர்கள் நான்கு பேருடன் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற போது, எதிரே வந்த கப்பல் மோதியதில் படுகாயமடைந்து சுய நினைவு இழந்தார். அவரை சக மீனவர்கள் மீட்டு அங்கு உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கப்பல் மோதி உயிரிழந்தார்

இதுகுறித்து உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வரவும், குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு அரசு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உறவினர்கள் மத்திய, மாநில அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பிழைப்புகாக கடல் கடந்து மீன் பிடிக்கச் சென்று மீனவர், கப்பல் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது மீனவக் கிராமத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

இஸ்ரோ தலைவர் சிவன் படித்த பள்ளியில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details