தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’காந்தியின் ஆசைப்படி காங்கிரஸ் கலைக்கப்பட்டிருந்தால் நாடு சுபிட்சமடைந்திருக்கும்’

கன்னியாகுமரி: காந்தி ஆசைப்பட்டது போல காங்கிரஸ் கட்சியை கலைத்திருந்தால் நாடு சுபிட்சமடைந்திருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

pon.radhakrishnan

By

Published : Oct 3, 2019, 4:33 AM IST

காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை விடுதலை செய்ய போராடி வாழ்நாள் முழுவதையும் நாட்டுப்பணிக்காக அர்ப்பபொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.ணித்தவர் மகாதமா காந்தி. அதனால்தான் காந்தி மக்களின் தேசப்பிதாவாக போற்றப்படுகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

அவரது 150ஆவது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். காந்தி பிறந்த தினத்தையொட்டி பாஜக சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. காந்தி எந்த லட்சியங்களுக்காக வாழ்ந்தாரோ, அவரது லட்சியங்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”காந்தி மிக முக்கியமாக விரும்பிய விஷயங்களில் நடக்காமல் போன ஒரு விஷயம் ஒன்று உள்ளது. நாடு விடுதலை பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள், அது தேவையில்லை என்றார் காந்தி. அது அன்றே நடந்திருந்தால் நாடு சுபிட்சபமடைந்திருக்கும்.பகவத் கீதை வாழ்வியலுக்கு வழிகாட்டும் அற்புதமான நூல். அதை மதரீதியாக பார்க்கக்கூடாது” என்று கூறினார்.

இதையும் படிங்க : ‘நான் நாங்குநேரியில் வெற்றி பெறுவது உறுதி’ - காங்கிரஸ் வேட்பாளர் நம்பிக்கை!

ABOUT THE AUTHOR

...view details