தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட 2 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்!

கன்னியாகுமரி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இரண்டு கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி நகைகள்

By

Published : Mar 23, 2019, 2:28 PM IST

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வது, லஞ்சமாக பொருட்கள் வழங்குவது போன்றவற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு தேர்தல் அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் இரவு பகலாக தமிழ்நாடு முழுவதும் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திராவைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 2 கிலோ வெள்ளி நகைகளைவைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தேர்தல் அலுவலர்கள் அவரிடமிருந்து வெள்ளி நகைகளைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details