தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விலையுயர்ந்த சைக்கிள்களை திருடிய பள்ளி மாணவன் - எச்சரித்த காவல்துறை!

கன்னியாகுமரி : நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் விலையுயர்ந்த கியர் சைக்கிள்களை திருடி வந்த சிறுவனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவன் சைக்கிள் திருடும் காட்சி
பள்ளி மாணவன் சைக்கிள் திருடும் காட்சி

By

Published : Oct 24, 2020, 7:18 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், இருளப்பபுரம், பீச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த கியர் சைக்கிள்கள் குறிவைத்து திருடப்பட்டு வருகிறது. சைக்கிள் என்பதால் காவல் நிலையத்தில் யாரும் புகார் செய்யாததால் தொடர் திருட்டுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இருளப்பபுரம் பகுதியில் கடந்த மாதம் இதேபோல் விலை உயர்ந்த கியர் சைக்கிள் ஒன்று மாயமானது. இதுகுறித்து உரிமையாளர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளி மாணவன் சைக்கிள் திருடும் காட்சி

அப்போது நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்த காவல்துறையினர், அவரது பெற்றோரையும் வரவழைத்து மாணவனின் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவனிடமிருந்து சைக்கிளை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதற்கு முன் அந்த மாணவன் சுமார் 18க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கியர் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று(அக். 24) நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு பகுதியில் உள்ள தெருவில் காலை 7 மணியளவில் இளைஞர் ஒருவர் நண்பரின் வீட்டு வாசலில் சைக்கிளை வைத்துவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது சைக்கிளை காணவில்லை.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பத்தாம் வகுப்பு படிக்கும் தோற்றமுடைய சிறுவன் ஒருவன் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஏற்கனவே கிடைத்த சிசிடிவி காட்சிகளையும் தற்போது கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளையும் ஒப்பிட்டு அந்த சிறுவனை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: டிஐஜி அலுவலக வளாகத்திலேயே கொள்ளையர்கள் கைவரிசை; சந்தன மரம் அபேஸ்!

ABOUT THE AUTHOR

...view details