தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளாவிலிருந்து குமரி வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்!

கன்னியாகுமரி: ககேரளாவிலிருந்து குமரி வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்புப் பணிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்புப் பணிகள்

By

Published : Apr 11, 2021, 12:43 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா சனிக்கிழமை (ஏப். 10) ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி, ஜெயசேகரன் தனியார் மருத்துவமனை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் அவர் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் போதுமான அளவிற்கு முன்னெச்சரிக்கை தடுப்பு உபகரணங்கள் உள்ளன. மருத்துவமனைகளில் காய்ச்சல் முகாம் நடப்பதால், அதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

கரோனா தொற்று குறித்து உடனடியாக ஆய்வுசெய்து விரைவாக முடிவுகள் கூறப்படுகின்றன. மருத்துவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் கரோனா தடுப்பு மருந்து கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கேரளாவிலிருந்து குமரி மாவட்டம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது உடல்நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த இ-பாஸ் நடைமுறை சனிக்கிழமை (ஏப்.10) முதல் அமலுக்கு வந்தது. கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் இன்றுமுதல் கண்காணிப்புப் பணிகள் தீவீரப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: 'சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்'

ABOUT THE AUTHOR

...view details