கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக வழங்கப்படாத பணப்பலன்களை உடனடியாக வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு காரோனா நோய் ஊரடங்கு தடுப்பு கால நிவாரணத்தொகையாக 2000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், 10 ஆண்டுகளாக வழங்கப்படாத விபத்து மரண நிதி, 6 ஆண்டுகளாகியும் வழங்கப்படாத இயற்கை மரண நிதி, 9 ஆண்டுகளாகியும் வழங்கப்படாத ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும்.
நலவாரியத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள 13 ஆயிரம் தொழிலாளர்களின் நலவாரிய அட்டைகளை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. என அவர்கள் கூறினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.