கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
இந்த விழாவில் 318 மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற்றனர். பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இவ்விழாவில் துணைவேந்தர் பிச்சுமணி பேசியதாவது:
சமுதாயத்தில் மாணவர்களின் பங்களிப்பு மிகமிக அவசியம். போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் தனித்திறனுடன் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, பல்வகையான திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாட்டின் நல்ல குடிமகனாக வாழ வேண்டும். மாணவர்கள் அலைபேசியை ஒதுக்கி வைத்துவிட்டு புத்தகங்களை வாசிக்க வேண்டும். மேலும் ஆராய்ச்சி பணிகளில் நுண்நோக்கு பார்வையுடன் திகழ வேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆசிரியர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!