தமிழ்நாடு

tamil nadu

திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் மனு!

By

Published : May 28, 2019, 11:48 PM IST

கன்னியாகுமரி :  பிரதமர் நரேந்திர மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டு வரும்  தி.மு.க எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட எஸ்.பி.,யிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.

பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் எஸ்.பியிடம் மனு

கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் நாகர்கோவில் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் " இந்திய பிரதமர் நரேந்திரமோடி குறித்து சமூக வலைதளங்களில் பத்மநாபபுரம் தொகுதியை சேர்ந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ், காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராஜா இருவரும் தவறாக பதிவிட்டு அவதூறு பரப்பி வருவதகாவும், இந்திய நாட்டின் இரண்டாவது கோட்ஸே நரேந்திர மோடி என கருத்து சித்திரமும் பதிவிட்டுள்ளனர். இது , பாஜகவினர் மட்டுமின்றி மக்களையும் மனவேதனை அடைய செய்துள்ளது. எனவே சமூக வலைத்தளங்களில் மோடி குறித்து தவறான கருத்தை பதிவிட்டுவரும் இருவரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்துள்ளனார்.

ABOUT THE AUTHOR

...view details