குமரி மாவட்டம், சிற்றார் அணை அருகே அரசு ரப்பர் கழக தோட்டம் உள்ளது. இங்கு, கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி சந்திரா ரப்பர் பால் வடிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரை காட்டெருமை முட்டியது, அதோடு அவரின் இடுப்பு பகுதியில் தொடர்ந்து கொம்புகளால் காட்டெருமை குத்தியது.
காட்டெருமை தாக்கி 6 மாதம் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி - attack
கன்னியாகுமரி: சிற்றார் அணை அருகே காட்டெருமை தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஆறு மாதங்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
காட்டெருமை தாக்கி 6 மாதம் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி
அப்போது தமிழ்செல்வன், என்பவரும் காட்டெருமை தாக்குதலில் படுகாயம் அடைந்தார். இருவரையும் மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில் பலத்த காயமடைந்த சந்திரா, ஆறு மாத காலமாக மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அருமனை காவல் துறையினார் விசாரனை நடத்தி வருகின்றனர்.