கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளருக்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் இணைந்து பணியாற்றிய சக ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, வங்கி மற்றும் வங்கிக்கு அருகில் அமைந்துள்ள ஏடிஎம் அறைகளுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டன.