நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் லோன் வழங்க ரூ. 2.50 லட்சம் (இரண்டரை லட்சம்) பங்கு தொகை செலுத்த வேண்டும் என்றும், லோன் தொகை தரும்போது தற்போது செலுத்தும் இந்த தொகையையும் திரும்பி தங்களுக்கே தந்த விடுவோம் என்றும் அதற்கு ஆவணமாக ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பான் கார்டு ஆகியவற்றை மேரி ரமணி பெற்றுக் கொண்டுள்ளார்.
இவரது பேச்சை நம்பி குடும்ப பெண்கள் பலரும் இவரிடம் பணம் கொடுத்துள்ளனர். லோன் பணத்தை ஒவ்வொருவரும் பெற முதலில் தலா ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிக்கொண்டு, பணம் செலுத்திய 3வது நாள் உங்களுக்கு 1 லட்சம் லோன் கிடைக்கும் என்று கூறி நம்பவைத்துள்ளார். அதன் பிறகு பணம் கொடுத்த நபர்களிடம் சென்று உங்களுக்கு தர கொண்டு வரப்பட்ட பணம் விஜிலென்ஸ் காவல்துறையினர் மற்றும் புதுக்கடை காவல்நிலைய ஆய்வாளர், உள்ளிட்ட காவல்துறையினர் பிடித்து வைத்துள்ளனர்.
அவர்களுக்கு உடனடியாக சிறிது பணம் கொடுத்தால் பிடித்து வைத்திருக்கும் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவார்கள். அதுகிடைத்த உடன் உங்களுக்கு தர வேண்டிய பணத்துடன், இந்த பணத்தையும் சேர்த்து தந்து விடுவதாகவும் கூறி பல லட்சம் ருபாயை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.