தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைகள் கட்டப்பட்ட நிலையில், மாணவர் மரணம்!

கன்னியாகுமரி: கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

suicide attempt
suicide attempt

By

Published : Aug 20, 2020, 10:14 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த மறுகாதல் விளை பகுதியைச் சேர்ந்தவர் சோபியான் (19). பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிரார். மாணவர் சோபியான், பக்கத்து ஊர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவர, பெண்ணின் உறவினர்கள் சோபியான் வீட்டில் வந்து தகராறு செய்துள்ளனர்.

அச்சமயம் சோபியான் இல்லாததால் அவரது தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர் குறித்து விசாரித்து சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று(ஆக.20) காலை சோபியான் வீட்டின் பின்புறமுள்ள தோப்பில் கைகள் பின்புறமாக கட்டிய நிலையில், பிணமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கல்லூரி மாணவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் இருந்ததால், யாரும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் அல்லது காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:உலக அளவில் முடங்கிய கூகுள் சேவைகள் : சர்வருக்கு என்ன ஆனது?

ABOUT THE AUTHOR

...view details