உலக பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வளாகத்திற்குள் அத்திவரதர் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளம் உள்ளது. இந்த தெப்பக் குளத்தில் ஆண்டுதோறும் தைப்பூச தெப்பத்திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான நேற்று (ஜன.28) உற்சவர் தேவராஜ சுவாமி திருமலையிலிருந்து கீழிறங்கி வந்து கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளினார். பெருந்தேவித்தாயாரும் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
வரதராஜப் பெருமாள் திருக்கோயில் தைப்பூச தெப்பத்திருவிழா
காஞ்சிபுரம்: வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் தைப்பூச தெப்பத்திருவிழா நடைபெற்றது.
வரதராஜப் பெருமாள் திருக்கோயில் தைப்பூச தெப்பத்திருவிழா
பின்னர், தங்கக்கேடயத்தில் ஸ்ரீதேவியும், பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமியும், பெருந்தேவித் தாயாரும் தெப்பத்திற்கு எழுந்தருளினர். அத்திவரதர் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில், அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் பெருமாளும், தாயாரும் மூன்று முறை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: பழனி கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்