தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெருந்தேவி தாயாருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான வெள்ளி தடிகள் சமர்ப்பிப்பு

உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பெருந்தேவி தாயாருக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர் 20 லட்சம் ரூபாய் செலவில் 20 கிலோ வெள்ளியினால் செய்யப்பட்ட தடிகளைச் சமர்ப்பித்தார்.

varadaraja perumal temple
varadaraja perumal temple

By

Published : Oct 4, 2021, 12:26 PM IST

காஞ்சிபுரம்: உலகப் பிரசித்திப்பெற்ற அத்திவரதர் கோயில் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெருந்தேவி தாயாருக்கு விழாக்காலங்களில் கோவிலுக்குள்ளேயே உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் விழாக்காலங்களில் பெருந்தேவித் தாயாரைச் சுமந்துசெல்லும் வகையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் மடத்தின் சீடரான சென்னையைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்கின்ற பக்தர் தனது சொந்த செலவில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் 9 அடி ஆலமர விழுதைப் பயன்படுத்தி 20 கிலோ வெள்ளித் தகடு பதித்து வெள்ளித்தடிகளைச் செய்திருந்தார்.

இன்று ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில் வரதராஜ பெருமாள் கோயிலில் தாயார் சன்னதிக்கு வெள்ளி தடிகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன.

பெருந்தேவி தாயாருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான வெள்ளி தடிகள் சமர்ப்பிப்பு

பின்னர் பெருந்தேவி தாயார் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பெருந்தேவி தாயாருக்கு விழாக்காலங்களில் பயன்படுத்த கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையும் படிங்க:LKG சீட் வாங்கித் தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி - மதுவந்தி மீது புகார்!

ABOUT THE AUTHOR

...view details