தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

உலகப்புகழ் பெற்ற அத்திவரதர் கோவில் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது!

By

Published : May 13, 2022, 1:13 PM IST

காஞ்சிபுரம் : 08 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் என அழைக்கப்படுவதும்,அத்தி வரதர் புகழ்பெற்றதுமான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம், பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். முக்கியமாக கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் போற்றும் வகையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நடைபெற்றது.

ஆனால், கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலால் கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறாமல் இருந்தது. தற்போது கரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் நீங்கி பல்வேறு தளர்வுகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கியது.

இந்த பிரம்மோற்சவம் வரும் மே 22 ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை மாலை என இரு வேளைகளில் அனுதினமும் உற்சவ வரதராஜ பெருமாள் தங்க சப்பரம், சிம்மம், ஹம்சம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யாளி, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது!

முக்கிய திருவிழாவான கருடசேவை உற்சவம் வருகிற 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், திருத்தேர் உற்சவம் 19 ஆம் தேதி வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளது. வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்திற்கு பிறகு இன்று காலை உற்சவத்தில் தங்கசப்பர வாகனத்தில் உற்சவ வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி ரங்கசாமி குளம், கீரை மண்டபம், பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் வழியெங்கும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:மாரியம்மன் கோயில் திருவிழா: விடிய விடிய நடைபெற்ற காளைகள் இழுக்கும் நிகழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details