அண்மையில் தற்கொலை செய்துகொண்ட, திருப்போரூரைச் சேர்ந்த பார் உரிமையாளர் நெல்லையப்பன், தனது முடிவுக்கு மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோரின் கெடுபிடிகளே காரணம் என வாக்கு மூலம் அளித்திருந்தார்.
பார் உரிமையாளர் தற்கொலை விவகாரம்: காவலர்கள் பணியிட மாற்றம்
காஞ்சிபுரம்: திருப்போரூரைச் சேர்ந்த பார் உரிமையாளர் நெல்லையப்பன், தற்கொலைக்குக் காரணமாக குறிப்பிட்டிருந்த மாமல்லபுரம் டிஎஸ்பி, திருப்போரூர் இன்ஸ்பெக்டர், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமணி, நெல்லையப்பன் புகார் தெரிவித்திருந்த பார் உரிமையாளர் ஆனந்தன், காவலர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை அலுவலர்கள் மூவரையும் சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.