காஞ்சிபுரம்அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தாமல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வீலிங் செய்து விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், 45 நாள் சிறையில் இருந்த பிறகு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
உயர் நீதிமன்றம் ஜாமீன் பெற்ற நிலையில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி சிறையில் இருந்து டிடிஎஃப் வாசன் விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம் காஞ்சிபுரம் பாலுக்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி மூன்று வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று (நவ. 6) பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் நிவாசன் முன்னிலையில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவு பிரதியை வழங்கி நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். தினமும் காலை 10:30 மணி அளவில் பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் நிபந்தனையின் படி முதல் நாளாக டிடிஎஃப் வாசன் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டார்.