தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த சிறுமி பலி

காஞ்சிபுரத்தில் தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 6 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த சிறுமி பலி
தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த சிறுமி பலி

By

Published : Aug 24, 2022, 12:32 PM IST

காஞ்சிபுரம்: மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் கார்த்திக். இவருக்கு திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை காலை சிறுமி விளையாடி கொண்டிருந்த போது வீட்டில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தண்ணீர் என நினைத்து குடித்த சற்று நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை கார்த்திக் மற்றும் அக்கம் பக்கத்தினர் மயங்கிய நிலையிலிருந்த சிறுமியைை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்து வந்தனர். இந்நிலையில் நான்கு நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க:சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை வெற்றி... சிறுமியை விரைவில் சந்திக்கும் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details