தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - தமிழிசை

காஞ்சிபுரம்: கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாலமுருகன் கோயில் நன்னீராட்டு விழாவில் தமிழிசை சவுந்தரராஜன்
பாலமுருகன் கோயில் நன்னீராட்டு விழாவில் தமிழிசை சவுந்தரராஜன்

By

Published : Mar 31, 2021, 3:33 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் அடுத்த தனியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 35 அடி உயரம் கொண்ட பாலமுருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நன்னீராட்டு விழா இன்று (மார்ச் 31) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அவருக்கு காவல் துறையினரின் அணிவகுப்புடன் கூடிய மரியாதை அளிக்கப்பட்டது.

பாலமுருகன் கோயில் நன்னீராட்டு விழாவில் தமிழிசை சவுந்தரராஜன்

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது, "நாளை முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. அப்போது நானும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன்.

அதேபோல் நீங்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டும் போதாது. கரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 45 வயதிலிருந்து 59 வயதுக்குள்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி!

ABOUT THE AUTHOR

...view details