காஞ்சிபுரம் மாவட்டம் திம்மையன் பேட்டை அருகே வன்னியர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (38). இவர் ஒடிசாவில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா என்ற பெண்ணுடன் திருமணமாகி, ஜெகத்ரட்சகன், சோம்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
செந்தில் குமார் விடுப்பில் கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்தார். அந்த நாள் முதல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக நான்கு நாட்களுக்கு முன் அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றார்.