தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2022, 7:33 PM IST

ETV Bharat / state

காஞ்சிபுரம் அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காஞ்சிபுரம் அருகே முசரவாக்கத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 ஏக்கர் நிலத்தினை பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் காவல்துறையினருடன் இணைந்து அதிரடியாக மீட்டெடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது, அரசு அதிகாரிகளின் பணியை தீவிரமாக கண்காணித்து வருகிறது. உயர் நீதிமன்றம் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலை ஆதாரங்களில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி உத்தரவின்படி வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட முசரவாக்கம் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரியில் நீர்பிடிப்பு பகுதியை 50 ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்பு செய்து விவசாய நிலமாக மாற்றி பயிரிடப்பட்டு வந்த நிலங்களை கணக்கெடுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை இளம் பொறியாளர் மார்க்கண்டேயன், காஞ்சிபுரம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முசரவாக்கம் ஏரியில் சுமார் 15 கோடி மதிப்பிலான 100 ஏக்கர் ஏரி நீர் பிடிப்பு நிலங்களை ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் அதிரடியாக மீட்டு கையகப்படுத்தி அறிவிப்புப் பலகையினை வைத்தனர்.

மேலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளின் போது அசம்பாவிதம் எதுவும் ஏற்படாது தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். நீர் பிடிப்பு நிலங்களை அதிகாரிகள் மீட்டெடுக்கும் பணி விறுவிறுப்பு அடைந்துள்ளதால் கிராமப்புற ஆக்கிரமிப்பாளர்களில் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரமடைய தொடங்கியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:குரங்கு கையில் காலி மதுபாட்டில்: திறக்க முடியாமல் திணறிய காணொலி வைரல்

ABOUT THE AUTHOR

...view details