தமிழ்நாடு

tamil nadu

ட்ரோன் மூலம் கண்காணித்த போலீஸ் - அலறி அடித்து ஓடிய இளைஞர்கள்!

காஞ்சிபுரம்: இளைஞர்கள் தாயக்கட்டை விளையாடிக் கொண்டிருந்தபோது ட்ரோன் மூலமாக போலீஸ் அவர்களை கண்காணித்ததால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

By

Published : Apr 9, 2020, 2:12 PM IST

Published : Apr 9, 2020, 2:12 PM IST

ட்ரோன் மூலம் கண்காணித்த போலீஸ் - அலறி அடித்து ஓடிய இளைஞர்கள்!
ட்ரோன் மூலம் கண்காணித்த போலீஸ் - அலறி அடித்து ஓடிய இளைஞர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து 144 தடை உத்தரவை மீறி பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ட்ரோன் மூலம் கண்காணித்த போலீஸ் - அலறி அடித்து ஓடிய இளைஞர்கள்!

இதன் காரணமாக மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்காக காஞ்சிபுரம் பகுதிகளில் இரும்பு ஷீட்டுகள் மூலம் அடைக்கப்பட்டிருக்கின்றன.

இதனிடையே காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே இரும்பு ஷீட்டுக்கு உட்புறமாக சிலர் அமர்ந்து தாயக்கட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் காவல் துறையினர் ட்ரோன் மூலம் மக்கள் நடமாட்டம் குறித்து காட்சிப்படுத்திக்கொண்டிருந்தனர். இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ட்ரோனைப் பார்த்ததும் அலறி அடித்துக்கொண்டு தப்பி வீட்டுக்குள் ஓடிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்ற கடைகளுக்குச் சீல்!

ABOUT THE AUTHOR

...view details