ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்து தற்பொழுது காஞ்சிபுரம், செங்கல்பட்டு தனித்தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதுமுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை செய்யப்பட்டுவருகின்றன. இதற்கான பணிகளை தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் மேற்கொண்டது.
இந்தப் பெருநகராட்சி வார்டு மறுவரையறை விவரங்களைத் தான் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி நேற்று காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தில் வெளியிட்டார். இதனைப் பொதுமக்கள் பெற்றுக்கொண்டனர்.
காஞ்சிபுரம் நகராட்சிக்குள்பட்ட 51 வார்டுகளிலும் உள்ள இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 353 வாக்காளர்கள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
பெருநகராட்சி வார்டு மறுவரையறையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 51 வார்டுகளில் தமிழ்நாடு மறுவரையறை ஆணையர் ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு நகராட்சி மட்டுமே உள்ளது.
பெருநகராட்சி வார்டு மறுவரையறை விவரங்களை வெளியிட்டார் காஞ்சிபுரம் ஆணையர் இது தொடர்பாகக் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், ”காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான மாவட்ட ஊராட்சிகள் நிா்ணயம் செய்யப்பட்டு, ஊராட்சி ஒன்றியங்களுக்கான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வாா்டு, மாவட்ட ஊராட்சி வாா்டுகளுக்கான எல்லை மறுவரையறைப் பணிகள் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய அறிவுரைகளின்படி மேற்கொள்ளப்படவுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளை உள்ளடக்கிய அமைப்புகளின் வாா்டுகள் மறுவரையறை பணிகளுக்காக சனிக்கிழமை (பிப். 1) வாா்டு மறுவரையறை வரைவு முன்மொழிவுகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் வெளியிடப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படவுள்ள வாா்டு மறுவரையறைப் பணிகளில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் மனுக்களாக வழங்கலாம்.
இதன்மீது மக்களின் கருத்துகள், மறுப்புகள் அளிக்க கேட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் மறுப்புகளைத் தெரிவிக்க பிப்ரவரி 8ஆம் தேதி கடைசி நாள். அதன்பிறகு பிப்ரவரி 15ஆம் தேதியில் மக்களின் கருத்து, மறுப்புகளைப் பெற்று அவற்றிற்கான தீா்வு காணவுள்ளோம்.
காஞ்சிபுரம் மாவட்டம் அடங்கிய உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படவுள்ள வாா்டு மறுவரையறையில் செய்ய வேண்டிய பணிகள் தொடா்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க : "எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது ஆபத்தானது" - பாமக ராமதாஸ்