மாமல்லபுரத்தின் சுற்றுலாத்தலமான அர்ஜுனன் தபசு கடற்கரைக் கோவில், ஐந்து ரதம் கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீன அதிபரும், இந்தியப் பிரதமரும் சுற்றிப் பார்க்க உள்ளனர். இந்த இடங்களில் தீவிரமாக பாதுகாப்பு அதகாரிகளின் ஆய்வு நடைபெற்று வருகிறது.
பிரதமர், சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு குறித்து சோதனை தீவிரம்
காஞ்சிபுரம்: மாமல்லபுரம் பகுதியில் வருகிற அக்டோபர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்திய, சீன பிரதமர்கள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு குறித்து சோதனை தீவிரம்
மேலும் மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் காவல் துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உணவகங்கள் தங்கும் விடுதிகள், வெளிநாட்டுப் பயணிகள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பில் டிஜிபி திரிபாதி தலைமையில் ஒரு குழுவும், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்தார் சரோவர் அணையை பார்வையிட்ட நரேந்திர மோடி
Last Updated : Sep 21, 2019, 8:01 PM IST