தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நான் வளர்த்த ஆட்டை வெட்ட போறாங்க காப்பாத்துங்க கலெக்டர்!'

குல தெய்வ வேண்டுதலுக்காக, பெற்றோர் தான் ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணியை படையல் போடுவதைத் தாங்கமுடியாமல், மாணவி மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் அனுப்பிய சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.

girl email to collector
ஆட்சியர் மூலம் செல்லப்பிராணியைக் காத்த சிறுமி

By

Published : Jul 31, 2021, 7:40 PM IST

செங்கல்பட்டு: கருநீலம் கிராமத்தில் வசிக்கும் டில்லிபாபு நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், பூரண சுகம் கிடைக்க குலதெய்வ கோயிலுக்கு கிடா வெட்டுவதாக வேண்டிக்கொண்டார்.

நாளடைவில் குணமடைந்த டில்லிபாபு, குல தெய்வ அருள்தான் தன்னைக் காத்ததாக நினைத்து, வேண்டுதலை நிறைவேற்ற தயாரானார். ஆனால் அவரது மகேஸ்வரியோ, தான் செல்லமாக வளர்த்து ஆட்டை வெட்ட வேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார்.

அந்தக் கெஞ்சல்கள் பலனளிக்காத நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார். இந்தப் புகாரைக் கண்ட ஆட்சியர் கால்நடைத் துறை மூலமாக அந்த ஆட்டை காக்க உத்தரவிட்டார்.

கால்நடைத் துறை அலுவலர்கள் அந்த ஆட்டை மீட்டு, கோயிலுக்கு உயிருடன் அர்ப்பணித்துள்ளனர். ஆடு வெட்டாமல் உயிரோடு இருப்பதால் மாணவி மகேஸ்வரி எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளார்.

ஆட்சியர் மூலம் செல்லப்பிராணியைக் காத்த சிறுமி

மின்னஞ்சலில் வந்த செய்தியை அலட்சியம் செய்யாமல், ஆட்டை காப்பாற்றிய ஆட்சியருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க:கிணற்றில் தத்தளித்த சிறுமியை மீட்ட சிறுவன்: ஆட்சியர் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details