காஞ்சிபுரம்: ஒரகடம் அடுத்த வல்லம் வடகால் சிப்காட் வளாகத்திலுள்ள யமஹா தொழிற்சாலையில், ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக புதிய தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேசாமல், பழைய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிர்வாகத்தைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலை உள்ளே காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று முதல் முதல் தொடங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே வல்லம் வடகால் சிப்காட்டில் யமஹா மோட்டார் இந்தியா தொழிற்சாலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் யமஹா இருசக்கர வாகன அனைத்து ரக இருசக்கர வாகனங்கள் தயாரித்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த மூன்றாண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை மீது ஒப்பந்தம் ஏற்பட சிஐடியூ தொழிற்சங்கங்களுடன் நிர்வாகம் பேச மறுத்து வருவதாகவும், புதிய தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் முன்பு இருந்து தொழிற்சங்க நிர்வாகி தொழிலாளர் குழுவுடன் ஊதிய உடன்பாடு ஏற்பட நிர்வாகம் முயற்சித்து வருவதாகவும், யமஹா நிர்வாகத்தினரின் நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.