தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்கள் - நிவாரணம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம்: கரோனா பாதிப்பால் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வழங்கினார்.

அரசு நிவாரணம்
அரசு நிவாரணம்

By

Published : Aug 8, 2020, 12:55 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் மருத்துவத் துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அரசு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர், செவிலியர், காவல் துறையினர் உள்ளிட்ட 28 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஓ.எம். மங்களம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த ராஜாராமன் மே 25ஆம் தேதியும், பாலுசெட்டி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவியாளராக பணிபுரிந்த பழனி ஜூலை 15ஆம் தேதியும் கரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அவர்களது குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் வழங்கினர்.

இதையும் படிங்க: பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை!

ABOUT THE AUTHOR

...view details